காதலித்து பார்,

காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்...

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் 
உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா 
உருண்டைஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்...


இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்...

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே 
அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்...

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்...

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் ♥ ♥
♥ ♥ ♥ வைரமுத்து ♥ ♥ ♥
 
வைரமுத்து  எழுதிய  வைர  வரிகளுடனான கவிதை
காதலித்தால்  இத்தனை  மாற்றம் நிகழ்கிறது   என்று பாருங்கள்.
Share
Share

2 comments:

Mahan.Thamesh சொன்னது…

ithai anuppiyamaikkaka poopathikku enathu nanri

poovathi சொன்னது…

poopathi or poovathi

கருத்துரையிடுக