வலைப்பதிவாளர்களுக்கு பயன்படும் கூகிள் குரோம் நீட்சிகள் மற்றும் வலை பயன்பாடுகள் .


கடந்த வாரம் என் தளத்தில் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் சில கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் பற்றி பதிவிட்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் வலைப்பதிவாளர்களுக்கும் இணையத்தள வடிவமைப்பளருக்கும் உதவும் பயனுள்ள நீட்சிகள் .

மிக சிறந்த தளங்களின் தொகுப்பினை தரும் 474747



எப்போதும் சிறந்தவற்றை பயன்படுத்தவே எல்லோரும் விருப்பம் கொள்கிறோம். இணையத்தில் கூகிள் தேடல் மூலம் எமக்கு தேவையான தளங்களை தேடி பெற்று கொள்ள முடியும். எனினும் மிக சுலபமாக மிக சிறந்த தளங்களை கண்டு பிடிக்க உதவுகிறது 474747 .

ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க


வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது .

FACE BOOK தொடர்பான சுவாரசிய தகவல்கள், அதன் வளர்ச்சி பாதை


சமூக வலைத்தளங்களில் 800 மில்லியன் பயனாளர்களை கொண்டு மிகப்பெரும் சமூக தொடர்பாடல் வலைத்தளமாக FACE BOOK தளம் விளங்குகிறது. காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது இந்த தளம் . 
ஆரம்ப காலத்தில் FACE BOOK தளத்தின் முகப்பு தோற்றம் 

தற்போது FACE BOOK தளமானது அனைவருக்கும் TIME LINE முகப்பு தோற்றத்தினை அமுல்படுத்தியுள்ளது அதன் வடிவம் 

FACE BOOK தளத்தின் பரிணாம வளர்ச்சியினை 2006 ம் ஆண்டு முதல் தருகிறது இந்த விளக்கப்படம் . இந்த படத்தின் மூலம் தளத்தின் முக்கிய மாற்றங்களை கால வரிசைப்படி தொகுக்கபட்டுள்ளது. 
The Evolution of Facebook Features


FACE BOOK தளத்தின் சமீபத்திய பயனாளர்களின் புள்ளிவிபரங்களை காட்டுகிறது கீழே உள்ள படம் . 
இப்புட்டு பேரு இருந்தாங்க அப்புட்டு பெரும் நல்லவங்களா என்ன ? உங்கள் FACE BOOK தளம் எவ்வாறு தாக்கப்படலாம் என்பதையும் உங்கள் முக பக்கத்தினை பாதுகாக்க 6  வழிமுறைகளை தருகிறது கீழே உள்ள படம் . 






மிக நீண்ட தூரம் வந்திருப்பிங்க  நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள உங்களுக்கு நவீன வசதிகள் கொண்ட FACE BOOK   கட்டில் ஒன்று பிளாக்கர் நண்பன் அப்துல் பசித்   உதவியுடன்.




நண்பர்களே இப்புட்டு தூரம் வந்ததுக்கு நன்றிகள் பல அப்படியே இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும்  பரிந்துரை செய்து பலரை சென்றடைய உதவுங்கள் . 




கிரிக்கெட் விளையாட்டினை நேரடியாக பார்க்க உதவும் தளங்கள்


நம்மவர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டுக்களில் கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டாகும். தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடக இந்தியா விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது. 

நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்கள் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப்படும் போது தொலைக்காட்ச்சியில் தொடர்ச்சியாக பார்ப்பது என்பது சிரமமானதே. உங்கள் கணினியில் இணைய இணைப்பின் மூலம் ஆன்லைனில் நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்களை பார்த்து ரசிக்க மிக சிறந்த தளங்களின் தொகுப்பு. 

FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க



  மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன . 

இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது . 
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க SCHWEPPES PROFILE APPS என்ற FACE BOOK தளத்திற்கான அப்பிளிகேசன் உதவுகிறது . 

YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்ய உதவும் TOOLBAR


நாம் MP3 மற்றும் MP4 வடிவில் பல இணையத்தளங்கள் ,மென்பொருட்களின் உதவியுடன் YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்யலாம் . இருப்பினும் மிக விரைவாக ஒரு கிளிக் மூலம் டூல்பார் ஒன்றின் உதவியுடன் YOUTUBE  வீடியோகளை MP3 மற்றும் MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் . 

இந்தியாவிற்குள் பயண திட்டத்தை செயற்படுத்த உதவும் தளம்



இந்திய நகரங்களுக்கிடையே விரைவானதும் ,குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளவும் எமக்கு வழிகாட்டியாகவும் ,எமது பயண திட்டங்களை முன்கூட்டியே செயற்படுத்தவும் உதவுகிறது WWW.90DI.COM எனும் தளம் . 

இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணைய தளங்கள்



இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லா வசதிகளையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது . அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் பல சுகாதார பிரச்சனைகளையும் , புதிய புதிய நோய்களையும் எம் வாழ்வில் சந்திக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு ,சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறே உங்கள் மின்னஞ்சல் முகவரியில் கொண்டு வந்து தருகிறது இந்த இணையத்தளங்கள் .


இந்த இணையத்தளங்களில் உங்கள் வினாக்களை TYPE  செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட்டு இந்த தளங்களில் சமர்பித்தால் ஓர் குறுகிய கால இடைவெளியில் உங்களுக்கான பதில் வந்து சேரும் .

கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் (EXTENSIONS)மற்றும் வலை பயன்பாடுகள்


தற்போது பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுளின் குரோம் உலாவி திகழ்கிறது. இந்த உலாவியில் பயன்பாட்டின் தன்மையை அதிகரிக்க பல நீட்சிகளை கூகுளின் ச்ரோமே வெப் ஸ்டோர் மூலம் பெற்று பயன்படுத்த முடியும் . 

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் சில நீட்சிகளையும் ,வலை பயன்பாடுகையும் தருகிறேன் . 


     கருத்துரைகள் ,விளம்பரங்கள் எதுவுமின்றி YOUTUBE வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது இந்த குரோம் வலை பயன்பாடு . இதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளில் பயனுள்ள வீடியோகளை காட்சிப்படுத்த முடியும் . 


 மிக இலகுவாக கணித வரைபடங்களை உருவாக்க சிறந்ததாக அமைகிறது இந்த வலைப்பயன்பாடு . இங்குள்ள + சின்னத்தை கிளிக் செய்வதன் மூலம் புதிய சமன்பாடுகளை சேர்த்து அதன் பெறுமானங்களை மாற்றி வரைபுகளை உருவாக்கலாம் . 

3 . SNAPIFI 

     இதன் மூலம் இணையங்களில் படிக்கும் போது ஏதேனும் ஓர் சொல் பற்றி மேலும் அறிய அது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. கீழே உள்ள வீடியோ பாருங்கள் . 


     சொற்களின் பொருளினை தெரிந்துகொள்ள உதவுகிறது .




பதிவு பயனுடையதாயின்    மறக்காமல் இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்து பலரை சென்றடைய உதவுங்கள் . 

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான சிறந்த MUSIC PLAYERS


சிறந்த இசையை தரவல்லதும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்பட வல்ல சிறந்த MUSIC PLAYERS அவற்றின் தரவிறக்க சுட்டிகளுடன் இந்த பதிவில் பகிர்துள்ளேன் . 


உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் .

  புதிய ஆண்டான 2012  இல் காலடி எடுத்து இப்போது தான் வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டில் உலகம் அழிவடையப்போகிறது என ஆரட்சியாளர்களும், ஜோதிடர்களும் சொல்லிவருகிறார்கள் . உலகம் அழியாது பாதுகாப்பதும் , அதன் நெடு நாள் நிலைத்திருப்பதுமே எங்கள் அனைவரினதும் பிரார்தனையாயிருக்கிறது . 

எது எப்படியோ உலகம் அழிவடையும் போது எப்படியான மாற்றங்கள் நிகழும் ,எவ்வாறு அழிவடையும் என காட்டும் கற்பனை கலைப்படைப்புகளை இங்கே இந்த பதிவில் தொகுத்துள்ளேன் . மிக அதிர்ச்சியையை ஏற்படுத்தும் வகையில் தத்துருவமாக உருவாக்கப்பட்டுள்ளது . படங்கள் கூகிள் உதவியடன் பெறப்பட்டது . 

உங்கள் வலைத்தளத்திற்கு ANDROID APPS நீங்களே சுலபமாக உருவாக்க 


ANDROID பயனாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . அதன் அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ANDROID சந்தையில் அதிகரித்து வருகின்றன .

உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைத்தளத்தை ANDROID APP  ஆகா வடிமைப்பதன் மூலம் உங்களின் வலைத்தளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும் .

ANDROID APPS இணை மிக எளிதாகவும் விரைவாகவும் நீங்களும் உங்கள் தளத்திற்கு ANDROID APP வடிவமைக்க APPSGEYSER என்ற தளம் உங்களுக்கு துணை புரிகிறது . இதற்கு நிரலாக்கல் பற்றிய அறிவு தேவையில்லை .

இணைய உலாவிகளின் வரலாறு (விளக்கப்படம் )



இன்று எத்தனையோ இணைய உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலானோரின் தெரிவு GOOGLE CHROME ,FIREFOX என்பதாகவே அமைகிறது .


GOOGLE CHROME உலாவியின் முதல் பதிப்பு 2008 இல் வெளியீடு செய்யப்பட்டது .
1994 இல் NETCAPS இணைய உலாவி வெளியீடு செய்யப்பட்ட பின்னரே 1995 இல்
IE  வெளியீடு செய்யப்பட்டது .