youtube தளத்தில் பார்த்து ரசித்தது

நான் you tube  தளத்தில் பார்த்து ரசித்த சில
வீடியோ காட்சிகள்

ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றில்
ரஜனிகாந்த்தின்  முத்து திரைப்பட பாடலை
பாடி ஆடும் ஜப்பானியர்கள்
மிகவும் சுவாரசியமான காட்சிபாட்டி வடை சுட்ட கதை தெரியும் உங்களுக்கு
அத விவேக் சொன்ன அதுவும் வைரமுத்து பாணியில 
இணைய காதலி

இணைய வழி வந்து  என்
இதயவாசல் திறந்தவளே
மூச்சுக்கு முன்னுறு முறை  என்
சுவாசத்தில் வசிப்பவளே

நீ online  வந்தால் போதும்
உலகம் என்னை ஒதுக்கி வைத்தாலும்
உலகத்தை ஒதுக்கி வைக்கிறேன்
நீ என்னுடன் இருப்பதால்இவர்களாலே ,இவர்கள் மதிப்பினை குறைத்து கொண்டார்கள்

யானை தன் கையால் தன் தலையில் மண் அள்ளி
போடுவது போல மக்கள் மத்தியில் தங்களுக்கிருந்த
திறமை மூலம் செல்வாக்கு பெற்றவர்கள் விபரீதமான
அசைகளால் தூண்டப்பட்டு தங்கள் செல்வாக்கையும்
புகழையும் அண்மைய காலங்களில்  கெடுத்து கொண்டார்கள்.
அந்த வகையில் முதலில் வருகிறார்

தண்ணி அடித்து, வேட்பாளரை அடித்து  தன் மதிப்பினை கெடுத்தவர் .
கப்டன் விஜயகாந்த்


தமிழ் நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாக வருவார்
என்று நம்பப்பட்ட ஒருவர் . இவர் தன்னுடைய மதிப்பினை
தண்ணி அடித்து விட்டு தப்பு தாளங்கள் போடுவதுடன்
தனது கட்சி வேட்பாளரை தாக்கி மதிப்பினை கெடுத்துக்கொண்டார்
(மப்படிச்ச விட்டில படுக்க வேண்டியது தானே )

ஆங்கிலம் கற்க சிறந்த இணைய தளங்கள்


சர்வதேச தொடர்பாடல் மொழியான அங்கிலத்தை
மாணவர்களும் , பெரியவர்களும்  வீட்டிலிருந்தே 
கற்றுகொள்ள மிக சிறந்த இணைய தளங்கள் .


இவ்  இணைய தளங்களில் பெரும் பலனவைவற்றில்
ஆடியோ வசதி உண்டு . அத்துடன் அத்துடன் கார்டுன் படங்கள் ;
 பயிற்சிகள் அவற்றுக்கான விடைகள் மூலம் ஆங்கிலம்
கற்று தரப்படுகிறது.

தமிழ் தேசியத்தலைவரின் சிந்தனைகள்


தமிழிழ(தமிழ் ) தேசியத்தலைவரின் சிந்தனைகள் போராட்டம்
மக்கள் விடுதலை குறித்தே அமைந்திருந்த போதும்
எல்லோருக்கும் பொருந்த கூடிய , சில அரிய சிந்தனைகள்
இதோமக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களது
கஷ்டங்களை போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை த்திட்டம்.

காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்

காதல் என்பது எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொ‌ன்றை 
சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல் காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் எ‌ன்ன சொ‌ல்‌கி‌ன்றன எ‌ன்பதை
 இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன்
 தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.

இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை
 அளிக்கும்.

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்

இன்று  எம்மை  தேடி  அத்தனையும்  எங்களின் 
இருப்பிடத்துக்கே  வந்து  கொன்ன்டிருக்கிறது.
அன்று  நாம்  கல்வி  பெற கல்லூரிகள், நுலகங்கள் 
என  தேடி செல்ல  வேண்டி  இருந்தது. இன்று  அவ்வாறு 
இல்லை இணையம்  மூலம் அத்தனையும் உங்கள் 
உங்களின்  இல்லத்திலே  பெறமுடியும்.
அந்த  வகையில்  மாணவர்களுக்கு  பயன்தரும் 
இணைய  தளங்களை  பட்டியலிடுகிறேன்.

1 .    http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
     தமிழ அரசின்  கல்வி அமைச்சு  இதனை உருவாக்கியுள்ளது  .
     இதிலே  12 ம் வகுப்பு வரை  தமிழ்  , அறிவியல்  ,
    கணக்கு  என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,

உங்கள் கணனியின் வேகத்தை அதிகப்படுத்த மென்பொருள் speed up my pc


உங்களது  கணணி  செயல்ப்படும்  வேகத்தை  அதிகரிக்க  மிக 
அருமையான  மென்பொருள் speed up my pc என்பதாகும்.
இந்த மென்பொருளை  நான்  நிறுவி  பயன்படுத்தி  வருகிறேன் 
மிகவும்  பயனுள்ளதாக  இருக்கிறது  அதனால்  உங்களுடன் 
பகிர்த்து  கொள்ளகிறேன்.

இந்த மென்பொருளை  தரவிறக்கம்  செய்ய  முன்னர்  இங்கு  சென்று 
உங்களது  மின்னஞ்சல் முகவரியினை  கொடுத்து  பதிவு செய்து
தரவிறக்கம் செய்க  
பதிவு செய்ய  here  http://mag.uniblue.com/stores/sp/signup/

 HERE  தரவிறக்கத்துக்கு here  என்பதை கிளிக்  செய்யுங்கள்

பின்னர் உங்களின் மின்னஞ்சல்  முகவரியில்  சென்று
உங்களுக்கான  activation  key  தரப்படும் அதன்மூலம் உங்களது
 மென்பொருளை நிறுவி  பயன்படுத்த  முடியும்.
இது உங்களின் கணனியினை  scan செய்து  கணனியில்  
காணப்படும் தவறுகளை  சரிசெய்து  கணனியின்  வேகத்தினை அதிகப்படுத்துகிறது.   

உங்கள் குரலில் face book ல் தகவல் பரிமாற்றம்

உங்களின்  இனிமையான குரலில்  உங்கள்
கருத்துக்களை  face book கில்  உள்ள  நண்பர்களுடன் 
பகிர்ந்து  கொள்ள  முடியும்.


இதற்கு  my mic  என்ற appilication ஐ உங்கள் face book ல் 
add   செய்வதன்  மூலம் இந்த  வசதியினை  பெறமுடியும்.
இதன்  மூலமாக  இலவசமாக  20  செக்கன்கள்  தகவலை
 பரிமாற்றமுடியும்.  
உங்கள் கணக்கினை  திறந்து  கிழே தரப்பட்ட  லிங்க்  மூலமாக
add  செய்ய முடியும். 


http://apps.facebook.com/mymicapp/

you tube தளத்திலிருந்து மென்பொருள் இன்றி தரவிறக்கம் செய்யலாம்.

எந்தவிதம்மான  மென்பொருளும்  இன்றி  நீங்கள்    ரசிக்கும்   வீடியோ
கட்சியினை  you tube  தளத்திலிருந்து  இலகுவாகவும்  விரைவாகவும்  தரவிறக்கம்

செய்ய  முடியும் 
 
முதலில்  நீங்கள்  தரவிறக்கம்  செய்ய  
விரும்மும் வீடியோ  வினை   you tube  
தளத்தில்  play  செய்யவும்  . அதன்  URL
ஐ  copy செய்து  உங்கள்  address baril  pest   செய்யவும் .

நீங்கள்  copy செய்து  pest செய்தது      இவ்வாறு  அமையும்
 http://www.youtube.com/watch?v=pmhaFqshE5U  இதில் 
kick   என்ற  சொல்லை  நீங்கள்  பேஸ்ட் செய்ததில் 
youtube  க்கு  முன்னர்  type   செய்து செயற்படுத்தவும்.
 http://www. kickyoutube.com/watch?v=pmhaFqshE5U
மேலே  காட்டியவாறு

இப்போது  வீடியோ வினை  தரவிறக்கம் செய்வதற்கான
தளம் தோன்றும். அதில் உங்களுக்கு  தேவையான மாதிரியை 
தெரிவு  செய்து மிக சுலபமாக  தரவிறக்கம் செய்யலாம்.

Eiffel கோபுரம்

பிரான்ஸ்  என்றதும்  உங்கள்  நினைவுக்கு  முதலில்  வருவது 
Eiffel   கோபுரம்  தான்  இது பிரஞ்சு  புரட்சி நூற்றாண்டு  நிறைவை 
கூறும் சின்னமாக  உருவாக்கப்பட்டது.,தொடங்கப்பட்டபோது 
இது 20 வருடங்களின்  பின்னர் இடித்துவிடுவது  என 
திர்மானிக்கப்பட்டே   1887 ம் ஆண்டு  இதன் பணிகள்
 gustave eiffel என்ற  பிரஞ்சு பொறியியலாளர் தலைமையில் 
தொடங்கப்பட்டது  . பின்னர்  அது கைவிடப்பட்டது.நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களா

ஒருவன்  தன்னுடைய  வாழ்கையில் வெற்றி பெற்று  சாதித்தவன் 
எல்லாம்  வெற்றியாளன் அல்ல மாறாக வெற்றி பெற  முனைந்து  
முயற்சி  செய்து  தோற்று  போபவனும் வெற்றியாளன் தான். 
நீங்கள்  வாழ்கையில்  வெற்றி  பெற்றவர்களா
ரால்ப் வால்டோ எமர்ஸன் வெற்றியாளன் யார்  என்பதை 
பட்டியலிடுகிறார் 
  
   

● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது
● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது
● இயற்கையை ரசிப்பது
● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது
● ஓர் ஆரோக்யமான குழந்தையாக  வாழ்வது
● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது
● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது
● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும்
    இன்பமடைந்தார்கள் என்று உணர்வது


இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில்
வென்றவர்களே.

ஆண்கள் நடனமாடினால் பெண்கள் மயங்கி விடுவார்கள்

ஆண்கள் நடனமாடினால் பெண்கள் மயங்கி விடுவார்கள் என கண்டுபிடித்
துள்ளனர் பிரித்தானிய மன நல நிபுணர்கள் டாக்டர். நிக் நீவ் மற்றும் 
ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபார் மேக்கர்டி. நடனம் நன்றாக இருந்தாலும் 
இல்லையென்றாலும் பெண்களை அது ஈர்த்து விடும் என்கின்றனர் .இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட நோர்தும்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 

இந்தநிபுணர்கள். ஆண்களின் முக்கிய நடன அசைவுகள் பெண்களை 
பாதிப்பதை முப்பரிமாண படங்கள் மூலமாக இவர்கள் ஆராய்ச்சி 
செய்துள்ளனர்.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐ பட் 2


ஆப்பிள் நிறுவனம் தனது ஐ பட் 2 இணை மார்ச் 11 ல் அமெரிக்காவில்
வெளியிட்டிருக்கிறது. இது முந்தையதை  காட்டிலும்  33% மெல்லிய
தாகவும் 8.8. மிமீ குறைந்த எடை கொண்டதாகவும் அதிவேக வசதி
கொண்டதாகவும் உருவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் சிறப்புகள்
1 .ஆப்பிள் நிறுவனத்தின் A5 என அழைக்கப்பட்ட புதிய டுயல் கோர்ஸ்
    பிராசசர் வசதி மூலம் 1.5  GIGA ஹெர்ட்ஸ்  வேகத்தில் இயங்குகிறது .
    இதனால்  ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ள முடியும் .
2 .முன்பக்கமும் ,பின்பக்கமகவும் இரண்டு கமராக்கள் உள்ளன
    இதன் மூலம் போட்டோ எடுக்கவும் முடியும் .

பெண்களை கவர சில வழிகள்பெண்களுக்கு உபதேசம்  பண்ணாதீர்கள்; இப்படி  செய்தால் 
உங்களின்  உபதேசங்களுக்கு  பெண்களின்  அம்மக்களுக்கு
பிடிக்கும் அனால்  பெண்களுக்கு பிடிக்காது  . அவர்கள்  சொல்லும்
உபதேசங்களை  காது கொடுத்து  கேட்கவும்;   (கேட்பது போல்  ஆவது
நடிக்கவும் )    அவர்கள் கூறுவதை  கேட்பதன்  மூலம் அவர்களின் 
கருத்துக்கு  நாம்  மதிப்பளிக்கிறோம்  என்கிற  உணர்வு  ஏற்படும் .

முகத்தை  சீரியசாக  வைத்துகொண்டிருந்தால்  எந்த  பெண்ணுக்கும் 
உங்களை பிடிக்காது  மாறாக   புன்சிரிப்புடன்  இருங்கள் (இளிச்ச
வாயனாகஇருங்கள் ) பெண்களை  பார்த்து  புன்னகைக்கும் போது
நீங்கள்  அவர்களைநேசிப்பதாக உணர்கிறாள்.

குழந்தைகளிற்கான தேடுதளம்google   தேடு  தளமானது  குழந்தைகளிற்கு  என்று தனியான
தேடுதளத்தை  உருவாக்கியுள்ளது. இதில்  குழந்தைகளிற்கு
 பயன்தரும்  இணைய தளங்களை  மட்டும் ஓடி  தேடி தருகிறது
 இந்த gogooligans .com தளம் .

   link ;   http://www.gogooligans.com/


இந்த வயசில உனக்கு என்ன கண்ணடி  


அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காய் போராடிய தலைவன்

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக
விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல்
பயணத்திலிருந்து  சில  குறிப்புகள்.

யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான்
 அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும்.
ஆகஸ்ட்  . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.

இவர் மாணவராக இருந்தபோதே  அரபாத், அரசியல் மற்றும்
சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு  முறைக்கு
 எதிரான  போராட்ட  வீரராக  தோற்றம்  பெறுகிறார்  .

உலக போரின்  போது பாலை  வனங்களில்  கை விடப்பட்ட
ஆயுதங்களை  தேடி  எடுத்து அவற்றின்  பயன்பாடுகள்  பற்றியும் 
பயிற்சியும்  பெற்று  வந்தார். பின்னர்  எகிப்திய  ராணுவத்தில் 
இணைந்து  பயிற்சி  பெற்றார். 

பின்னர்  அரபு இஸ்ரேல்  எதிர்ப்பு  போராட்டங்களில்  களத்தில்
செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை
நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள்
தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான்நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின்
அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.

மிக சிறந்த browser maxthon

இணைய browser கள் இன்று பல இருந்தாலும் மக்களால் மிக சிறந்த
 browser ஆககொள்ளப்படுவது google chrome அனால் அதைவிட சிறந்த
 இணைய   browser சீனா நாட்டை சேர்ந்த maxthon  browser  விளங்குகிறது .
 இது மிக வேகமாகசெயல்படுவதுடன் பின்வரும் சிறப்பியல்புகள்
 கொண்டது .


உங்கள் புகைப்படங்களை இணைய தள உதவியுடன் வித்தியாசமாக வடிவமைக்க 2

உங்கள் புகைப்படங்களை இணைய தள உதவியுடன் வித்தியாசமாக வடிவமைக்க ஏற்கனவே இரண்டு இணைய முகவரி பற்றி பார்த்தோம் . இப்போது அதே போன்று சற்று வித்தியாசமான இனையதளம் http://fr.funphotobox.com/ ஆகும் .


இவ் இணைய தளத்தின் சிறப்பு என்னவெனில் இங்கு உங்களுக்கான படங்களின் மாதிரி பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது .
அதாவது அனிமேஷன்.மற்றும் கார்டு,இன்னும்பல  அத்துடன் இதில்
உங்களின் புகைப்படத்தின் தேவையான பகுதியைதெரிவு செய்யும் வசதி உண்டு என்பதுடன் வடிவமைக்கப்படும் படங்கள் இவ் இனைய தளத்தில் இருந்தே பல சமூகவலைத்தளங்களுக்கு பகிர முடியும், 
http://fr.funphotobox.com/

இரண்டு விதமான பெண்கள்கருங்கூந்தல் முடி விரித்து
அதில் நறுமண  மலர்கள்  சூடி
கண்ணுக்கு மை போட்டு
காலில் இரு கொலுசு மாட்டி
நெற்றி மஞ்சள் திலகம் இட்டு
நிமிர்ந்த நின் பார்வையோடு
அன்ன நடை நீ  வாங்கி
வீதியோரம் நடந்து வந்தால்
விபத்துக்கள் அதிகமடி
பெண்ணே..!

பார்த்து ரசிக்க

நதி கடலுடன் சங்கமம்
நான் உன்னுடன் சங்கமம்.

மழை வந்து நில மடந்தையுடன்
கைகோர்த்து நடக்கிறது .
அப்போது இதை  பொறுத்து கொள்ளாத
பூக்கள் உதிர்கின்றன .


பெண்களின் பருவங்கள் 7மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச்
சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம்,
வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என
பெயரிடலாம். இவை ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்துவதாகவேஅமையும் .


இருந்த போதும் பெண்களுக்கே  உரித்தான  பருவ மாற்றங்கள் 7
உள்ளன என்று சொல்லப்படுகிறது.பெண்களின் பருவங்கள் 7
பேதை              1 தொடக்கம் 8  வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
பெதும்பை        9 தொடக்கம் 10   வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
மங்கை             11 தொடக்கம் 14   வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
மடந்தை           15 தொடக்கம் 18   வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
அரிவை           19 தொடக்கம் 24   வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
தெரிவை          25 தொடக்கம் 29 வயது வரையிலான பெண்களை  குறிக்கும்
பேரிளம் பெண்             30   வயது முதல்  இவ்வாறு அழைக்கப்படுகின்றனர் .

நீங்க எப்பிடி சொல்லுறிங்களோ ?

உலக கிண்ண தொடரினை நேரடியாக கண்டு களிக்கலாம். இந்த இணைய உதவியுடன் .

உலக கிண்ண தொடரினை உங்களது கணனியில் நேரடியாக கண்டு களிக்கலாம்.
இந்த இணைய உதவியுடன் .

http://www.crictime.com/

உலகின் எட்டாவது அதிசயம்

19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகின் எட்டாவது அதிசயமாக
கருதப்பட்ட நியூசிலாந்து நாட்டின் சுற்றுலா மையமொன்று
மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக பூமியில் புதைந்தது.
அந்த எட்டாவது அதிசயம் 125 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து
ஏரிக்கு கீழே அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நியூசிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள், அவர்களது
ஆராய்ச்சியின் போது நியூசிலாந்து நாட்டின் ரொடொமொஹானா
ஏரியில் 60 மீட்டருக்கு கீழே வெள்ளை நிற மேற்கூரைகளும்,
இளஞ்சிவப்பு நிற அமைப்புகளும் தென்பட்டதாக கூறியுள்ளனர்.

கண் பார்வையால் இயங்கும் மடி கணினிகண் பார்வையால் இயங்கும் மடி கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 விஞ்ஞான உலகின் புரட்சியாக இன்று உருவெடுத்துள்ளது கணினிகள். இன்றைய உலகம் கம்ப்யூட்டர் யுகம் என்றே கூறப்படுகிறது. அதிலும்
ஒருபடி மேலாக போகுமிடமெல்லாம் கையில் எடுத்துச் சென்று
மடியில் கூட பாரமில்லாமல் வைத்துக் கொண்டு இயக்கக்கூடிய
லேப்டாப் எனப்படும் மடி கணினியும் இன்று மிக சாதாரணமாகி
வருகிறது.

மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் எல்லையே இல்லை. அதற்கேற்ப விஞ்ஞானிகளும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

காதலித்து பார்,

காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்...

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் 
உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா 
உருண்டைஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்...

பெண்மை இல்லையேல் மரணித்துவிடும் உலகம்

மகளாய் பிறந்து மடி  தவழ்வாள்                     
தங்கையாய் மாறி செல்ல குறும்பு செய்வாள்
அக்காவாய் கண்டிப்புடன் ஆதரவு தருவாள்

தோழியாய் துன்பத்தில் தோள் கொடுப்பாள்
காதலியாய் கருணை மழை பொழிவாள்
மனைவியாய் உயிரில் கலந்த உறவாவாள்

அம்மாவாய்  அன்புடன் இறை அருள் புரிவாள்
பாட்டியாய்   மாறினாலும்  பாசம் நிறைப்பாள்  
 எப்படியோர் உறவாயினும் பெண்மை
 இல்லையேல் மரணித்துவிடும் உலகம்.

  
அனைத்து  மகளிருக்கும்   எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


Face book இன் பின்னணியை இணைய உதவியுடன் மாற்றலாம்

உங்களது facebook தளத்தின் பின்னணியானது இவ்வாறு தான் காணப்படும் . *அதன் பின்னணியை மாற்றியமைக்க முடியும். http://userstyles.org/styles/browse/facebook.com இந்த இணைய தளத்துக்கு
சென்று அங்கு  காணப்படுகின்ற  theme (பின்னணி வடிவங்கள் ) தெரிவு 
செய்யும் பொது  அதன் preview  தோற்றமும் தெரியும்.  உங்களுக்கு 
விரும்பியதை தெரிவு செய்த பின்னர்  கீழ்  காணப்படுவது போல  தோன்றுகின்ற  மெனுவில்  install as user script  என்பதை click செய்யுங்கள்.
இணைய உதவியுடன் உங்கள் புகைப்படங்களை வித்தியாசமாக மாற்றலாம்

இணைய தளங்களின்  உதவியுடன் உங்கள் புகைப்படங்களை
வித்தியாசமாக  மாற்றி அமைக்க முடியும் .


  இணைய தளங்களில் நாம் எமது  புகைப்படங்களை எங்களுக்கு
பிடித்த பின்னணியில் வடிவமைத்து கொள்ள முடியும்.
உணர்வு பூர்வமான காதல் கதை

நான் இணைய வலைப்பதிவு ஒன்றில் பார்த்த உணர்வு பூர்வமான
காதல் கதை உங்களுக்காக 


ஒரு பையன் ஒரு பெண்ணை காதல் செய்தான் உயிருக்கு உயிராக அவளை நேசித்தான்...ஆனால் அந்த பெண்ணிற்க்கு பார்வை கிடையாது...ஆனால் இருவரும் காதலித்தனர்...மிகவும் ஆழமாக....


     ஒரு நாள் அந்த பெண் அவனிடம், 'தன்னை விட்டுசென்று விடமடாய் அல்லவா! என் கேட்டால், அதற்கு அவன், 'நான் உன்னை தான் திருமணம் செய்ய போவதாக கூறினான்.....இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி....சந்தோசமாக நாட்கள் ஓடின
 
 

வியப்பூட்டும் பிரான்சின் ரயில் நிலையங்கள்

பிரான்ஸ் என்றதும் நினைவுக்கு வருவது இதுதானே

உலகிலேயே மிக சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நாடு
பிரான்ஸ். இங்குள்ள சாலைகளும் புகையிரத   நிலையங்களும்
காண்போரை வியப்பு  கொள்ள  வைக்கிறது.


 பிரான்சின்  நிலக்கீழ்   ரயில்  சேவையானது  ஏறக்குறைய  110
ஆண்டுகளுக்குமுன்பே  தொடங்கப்பட்டது. பின்னர் சனத்தொகை
அதிகரிக்க போக்குவரத்தினை விஸ்தரிக்க வேண்டிய தேவை
ஏற்ப்பட்டபோது குழப்பிபோனர்கள் பிரெஞ்ச்க்கர்கள். ஏனெனில்
நிலத்துக்கு கீழே   தோண்டப்பட்டு விட்டது மேலே ஒன்றும் செய்ய
முடியாது கரணம் வானைத்தொடும் கட்டடங்கள்  யோசித்த
பிரெஞ்ச்காரர்கள்  தோண்டப்பட்ட இடத்திலே மேலும் அழமாக
தோண்டி புகையிரத நிலையங்களை நிறுவியுள்ளனர்.

காதல் த(பி)த்துவம்


அசடனையும் அறிவுகூர்ரமை உள்ளவனாய் மாற்றைவிடும் காதல் -சார்லஸ்டிக்கன்
    அதுதான் சில நொடிபொழுதிலே கவுள்றாங்க ( கவரப்படுறாங்க)

போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை  ஆள்வது காதல் -ஹெர்பாட்
    பென்கள் பார்த்தாலே போதும் இது தேவை இல்லை தானே

உலகை வலம்வரவும் சுற்றிவரவும் செய்வது காதல் -மார்லோ
   பார்க் பீச் எண்ணு சுத்துறத சொல்லுறாரு
காதல் ஒருவரை தொடும் போது அவர் கவிஞராகிறார் -பிளேட்டோ
 பைத்தியகாரதனமாக பேசுவதை சொல்லுறாரு போல

சூரியன் மறையலாம் ஆனால் நிலையான காதல் மறைவதில்லை-ஊட்
  உண்மைதாங்கப்ப
 படிச்சிட்டு எனக்கும் சொல்லிட்டு போங்க இவங்க சொன்னது பத்தி

வாழ்க்கை

 
 
வாழ்க்கை என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய
கருத்துக்கள் இதோ
 
வாழ்க்கை ஒரு போட்டி, சந்தியுங்கள்
                 வாழ்க்கை ஒரு பரிசு, ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசமான செயல், சாதியுங்கள்
                  வாழ்க்கை ஒரு வேதனை, சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு துன்பம், அதனைத் தோற்கடியுங்கள்
             வாழ்க்கை ஒரு கடமை, அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதனை ஆடுங்கள்
 

இலகுவாக இனையதளங்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்ய

நீங்கள் பல இனையத்தளங்களில் வீடியோ காட்சிகளை ரசித்திருப்பீர்கள்
சில இனைய தளங்களில் இருந்து இலகுவாக வீடியோவை தரவிறக்கம்
செய்ய முடிவதில்லை சிலவற்றுக்கு  மென்பொருளின் உதவியுடன்
தரவிறக்கமுடியும்.நீங்கள் பார்க்கின்ற வீடியோ காட்சியினை 
இலகுவாகவும் விரைவாகவும்இந்த  மென்பொருளின் உதவியுடன் தரவிறக்கம் செய்யலாம்.இதற்கு இந்த மென்பொருளை  திறக்க தேவையில்லை. 


 http://www.speedbit.com/video/ இந்த தளத்தில் இலவசமாக தரவிறக்கம்
செய்யுங்கள். உங்களின் இனைய உலாவியில் இங்கு காட்டப்பட்டது
(toolbar) போல சேர்ந்து கொள்ளும். நீங்கள் தரவிறக்கம் செய்யவேண்டிய வீடியோ செயல்படதொடங்கும் போது படத்தில் அம்பு குறியினால்
காட்டிய button துள்ளும் அதிலே click  செய்வதன்மூலம் இலகுவாக 
தரவிறக்கமுடியும் .எல்லர இனையத்தளங்களிலும் செயற்படாது
பயன்படுத்தி பாருங்கள்

மனித பாவத்தால் 

மனித பாவத்தால்
கழுகுகளும் கைதட்டும்
காக்கையும் கண்ணீர் வடிக்கும்
நாய்களும் ஊழவிடும்
மனித உடல்கள் நீரில் மிதக்கும்
நிலங்கள் நடுங்கும்
இடிகள் வெடிக்கும்
மின்னல் பறிக்கும்
கடல் எரிமலைகள் குமுறும்
உலகம் தேயும்
நிலவு சாயும்
சூரியன் சுட்டெரிக்கும்
மனித பாவங்கள் கைகொட்டும்
மனித கண்ணீர் நாட்டை நிரப்பும்
மனிதா நீ மாறாவிட்டல்
உலகம் உருகும்
உயிர்கள் கருகும்
மனிதா பாவத்தை நிறுத்து!
பரிசுத்தமாய் மறு
கடவுளிடம் பாவத்துக்காய் அழு
இதயத்தை பரிசுத்தமாக்கு
இருள் மறைந்து
ஒளி பிறக்கும்
காத்திரு கடவுளின்
அருளுக்காய்
உலகம் மீண்டும்
புதிதாய் மாறும்
கண்ணீரை துடைக்க
கடவுள் பூமி வருவர். 

எழுதியவர்  பூபதி
நன்றி

அன்னை தெரசாவின் பொன்மொழிகள்1 நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்குநம்மை நாமே 
   முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்
2.உனக்கு உதவி செய்தவரை மறக்காதே
  உன்னை விரும்புபவரை வெறுக்காதே
   உன்னை  நம்பியவரை ஏமாற்றாதே
3, அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
    ஆனால் அந்த அன்பே பொய்யானால் உலகத்தில் அதைவிட
    கொடிய நோய் எதுவுமில்லை
4.இந்த உலகத்தில்  நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும்
   நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்கு தென்படாத
   கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்

ஹிட்லரும் ஆப்பிள் ஐபேடும்


நான் படித்ததும் ரசித்ததும் உங்களுக்காக

 ஐபேடில்  குறைபாடுகள் 

மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. எளிமையாக சொல்ல வேண்டும் எனில் நீங்கள் பாடல் கேட்டு கொண்டே இணையத்தில் உலவவோ, ஈபுக் படிக்கவோ முடியாது. ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும்தான்.
வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.
நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது.
16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.
ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) கூட ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.
எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. 
ஹிட்லர் ஆப்பிள் ஐபேடுக்கு எதிராக கொதித்து எழுவதாக வீடியோக்கள் யூடியுபில் வருகின்றன. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!


Google Alert
தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.

  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு  http://www.google.com/alerts செல்லுங்கள்.
  • உங்களுக்கு  இதே போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.                                                                                                                                   
  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும்.

தமிழ் பாடலுக்கு யப்பனிய சிறுமிகளின் நடனம்

தமிழ் பாடலுக்கு யப்பனிய சிறுமிகளின் நடனம்
சும்மா கலக்குறாங்க

நான் எழுதாத கவிதை

சற்று சிந்தித்து நான் எழுதிய கவியினை
அலட்சியமாய் வாசித்து இன்னும்
அதிகம் எழுது என்பாய்

மூளையை கசக்கி அழகான கவிவரிகள்
தோன்றாததால் அத்தனையும் கசக்கி
குப்பையில் போட்டு உன்னிடம் நீட்டுவேன்
வெற்று காகிதம்

ஆர்வமாய் பார்த்து உன் மௌனப்புன்னகையால்-நீ
எழுதுவாய் நான் எழுதாத கவிதையை

கவணியுங்கள்

கவணியுங்கள் உங்கள் எண்ணங்களை அவைகளே வார்த்தைகளாக வருகின்றன
கவணியுங்கள் உங்கள் வார்த்தைகளை அவைகளே செயல்களாக வருகின்றன
கவணியுங்கள் உங்கள் செயல்களை அவைகளே பழக்கமாக வருகின்றன
கவணியுங்கள் உங்கள் பழக்கங்களை அவைகளே நடத்தையாக வருகின்றன
கவணியுங்கள் உங்கள் நடத்தையை அவைகளே உங்களின்           எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன

பெண்களை பற்றி இப்படி சொல்லுறாங்க பெருமையா

1, பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி- வில்சன்மிஸ்னர்
2, காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் -ஷேக்ஸ்பியர்
3,பெண்னின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது ஆனால்  
   ஆண்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது         -  லார்ட்பெரன்
4,தன்னைதானே பாதுகாத்து கொள்வதே பெண்களுக்கு அழகு -ஔவையார்
5,பெண்களுக்குரிய சுகந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு  சூபீட்சம் அடையாது-நேரு                                                                                                                  பெண்களை பற்றி இப்படி  பெருமையா அதிகம சொல்லியிருகிறார்கள் மிகுதி பிறகு பதிவுசெய்கிறேன்