பார்த்து ரசிக்க

நதி கடலுடன் சங்கமம்
நான் உன்னுடன் சங்கமம்.

மழை வந்து நில மடந்தையுடன்
கைகோர்த்து நடக்கிறது .
அப்போது இதை  பொறுத்து கொள்ளாத
பூக்கள் உதிர்கின்றன .




பெண்ணே உன் அழகில் மயங்கி
உன்னை ரசிக்க வந்த ரசிகனுக்கு
ஏன் இந்த கறுப்பு கொடி.







பெண்ணே நீ மழையில் நனைவதனால்
எனக்கு காச்சல் வருமல்லவா.?


நான் பிறந்த இடத்திற்கு போகுமுன்
 எத்தனையோ  பேரை வாழவைக்கிறேன் .       
ஆதவன்  கடலை அணைத்து கொள்வதால்
சிவக்கிறாள்  கடல் கன்னி .
கோபத்தால்  சிவக்கிறாள் வானமகள் .   
படங்கள்  இணையதளங்களில்  சுட்டது.
கவிதை நெஞ்சிலபட்டது. கவிதை பிடிக்கல்ல என்றால் 
படிக்காமல் உங்கள்  எண்ணங்களை  திறவுங்கள்.
Share
Share