இணைய காதலி

இணைய வழி வந்து  என்
இதயவாசல் திறந்தவளே
மூச்சுக்கு முன்னுறு முறை  என்
சுவாசத்தில் வசிப்பவளே

நீ online  வந்தால் போதும்
உலகம் என்னை ஒதுக்கி வைத்தாலும்
உலகத்தை ஒதுக்கி வைக்கிறேன்
நீ என்னுடன் இருப்பதால்

நாம் பேசிய பொழுதுகளில்
நமக்கு தெரியாமல் எத்தனை
கவிதைகள் மரணித்து  போகின்றன - அவற்றின்
மரணத்தில் தான் நம் காதல் உதித்தது.

நீ காட்டிய புகைப்பட தொகுப்புகளை
அழித்து விட்ட போதும்
என் மனதில் அவை கோர்வைகளாக
சேமிக்கப்பட்டு இருக்கின்றன

உன்னுடன் பேசிய மணி பொழுதுகள்
எனக்கு கணப்பொழுதுகள் ஆகின்றன
நீ விடை பெற்று சென்ற பின்பும்
நான் தவிக்கிறேன் விடை பெற உன் நினைவுடன் . 
Share
Share

2 comments:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

கடைசி வரி சூப்பர்

எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

Mahan.Thamesh சொன்னது…

நன்றி தமிழ் வாசி அண்ணா உங்கள் கருத்துக்கும்
வருகைக்கும் .

கருத்துரையிடுக