தமிழ் தேசியத்தலைவரின் சிந்தனைகள்


தமிழிழ(தமிழ் ) தேசியத்தலைவரின் சிந்தனைகள் போராட்டம்
மக்கள் விடுதலை குறித்தே அமைந்திருந்த போதும்
எல்லோருக்கும் பொருந்த கூடிய , சில அரிய சிந்தனைகள்
இதோமக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களது
கஷ்டங்களை போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை த்திட்டம்.


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் அனால்
உயிரிலும் உன்னதமானது எமது உரிமை ,எமது சுகந்திரம் ,
எமது கௌரவம்.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு ,கோழைத்தனத்தின்
தோழன் ,உறுதியின் எதிரி , மனித பயங்களுக்கெல்லாம்
மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தை கொன்று
விடுபவன் தான் தன்னை வென்று விடுகிறான் .

சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும் .

நான் பெரிது நீபெரிது  என்று வாழாமல் நாடு பெரிதென்று
வாழுங்கள் . நாடு நமக்கு பெரிதானால் நாம் எல்லோரும்
அதற்கு சிறியவர்களே ,எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது .

உழைப்பவனே பொருளுலகை படைக்கிறான் மனித
வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறான் .

பிடிச்சிருக்க பிடிக்கல்லையா சொல்லிட்டு போங்கப்பா
Share
Share