பெண்மை இல்லையேல் மரணித்துவிடும் உலகம்

மகளாய் பிறந்து மடி  தவழ்வாள்                     
தங்கையாய் மாறி செல்ல குறும்பு செய்வாள்
அக்காவாய் கண்டிப்புடன் ஆதரவு தருவாள்

தோழியாய் துன்பத்தில் தோள் கொடுப்பாள்
காதலியாய் கருணை மழை பொழிவாள்
மனைவியாய் உயிரில் கலந்த உறவாவாள்

அம்மாவாய்  அன்புடன் இறை அருள் புரிவாள்
பாட்டியாய்   மாறினாலும்  பாசம் நிறைப்பாள்  
 எப்படியோர் உறவாயினும் பெண்மை
 இல்லையேல் மரணித்துவிடும் உலகம்.

  
அனைத்து  மகளிருக்கும்   எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


Share
Share

3 comments:

poovathi சொன்னது…

அருமை அண்ணா அருமை

Mahan.Thamesh சொன்னது…

நன்றி உங்கள் பாராட்டுக்கு

poovathi சொன்னது…

உங்கள் நன்றிக்கு எனது நன்றிகள் பல

கருத்துரையிடுக