மனித பாவத்தால் 

மனித பாவத்தால்
கழுகுகளும் கைதட்டும்
காக்கையும் கண்ணீர் வடிக்கும்
நாய்களும் ஊழவிடும்
மனித உடல்கள் நீரில் மிதக்கும்
நிலங்கள் நடுங்கும்
இடிகள் வெடிக்கும்
மின்னல் பறிக்கும்
கடல் எரிமலைகள் குமுறும்
உலகம் தேயும்
நிலவு சாயும்
சூரியன் சுட்டெரிக்கும்
மனித பாவங்கள் கைகொட்டும்
மனித கண்ணீர் நாட்டை நிரப்பும்
மனிதா நீ மாறாவிட்டல்
உலகம் உருகும்
உயிர்கள் கருகும்
மனிதா பாவத்தை நிறுத்து!
பரிசுத்தமாய் மறு
கடவுளிடம் பாவத்துக்காய் அழு
இதயத்தை பரிசுத்தமாக்கு
இருள் மறைந்து
ஒளி பிறக்கும்
காத்திரு கடவுளின்
அருளுக்காய்
உலகம் மீண்டும்
புதிதாய் மாறும்
கண்ணீரை துடைக்க
கடவுள் பூமி வருவர். 

எழுதியவர்  பூபதி
நன்றி
Share
Share

2 comments:

poovathi சொன்னது…

சின்னவனில் எனது கவிதையை வெளியிட்டமைக்கு நன்றி அண்ணா

Mahan.Thamesh சொன்னது…

தொடர்ந்தும் எழுதுங்கள்

கருத்துரையிடுக