அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக
விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல்
பயணத்திலிருந்து சில குறிப்புகள்.
யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான்
அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும்.
ஆகஸ்ட் . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.
இவர் மாணவராக இருந்தபோதே அரபாத், அரசியல் மற்றும்
சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு முறைக்கு
எதிரான போராட்ட வீரராக தோற்றம் பெறுகிறார் .
உலக போரின் போது பாலை வனங்களில் கை விடப்பட்ட
ஆயுதங்களை தேடி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் பற்றியும்
பயிற்சியும் பெற்று வந்தார். பின்னர் எகிப்திய ராணுவத்தில்
இணைந்து பயிற்சி பெற்றார்.
பின்னர் அரபு இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் களத்தில்
செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை
நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள்
தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான்நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின்
அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.