உங்களின் மருத்துவ கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் தரும் ANDROID செயலி "நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்"  நோய்கள் நம்மை அணுக முன் காப்பதே சால சிறந்தது . ஆனால் நம்மில் பலர் நோய் ஏற்பட்டு அதன் தாக்கம் பெரிதாக உடலில் ஏற்படும் போதுதான் வைத்தியரை நாடி செல்கிறோம். இதனால் நம் உடல் நோய்க்கு காலம் முழுவதும் அடிமையாகி விடுகிறது.

இப்போதெல்லாம் நம் சட்டைப்பையில் வைத்தியரை கொண்டு சென்று அவரிடம் ஆலோசனைகளை பெறமுடியும். உங்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் நோய்கள் தொடர்பான விளக்கங்கள் ஆலோசனைகளை நீங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற வழி வகை செய்கின்றது ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயல்படவல்ல HealthTap என்ற மருத்துவ செயலி;   

. அத்துடன் அவர்களின் ஆலோசனைகளில் சிறப்பானதுக்கு உங்களின் நன்றியுனர்வினை தெரியப்படுத்தலாம்.

இந்த செயலியினை உங்களின் ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து உங்களை ஒரு உறுப்பினராக பதிவு செய்தல் வேண்டும்.  நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால் மருத்துவ ஆலோசனை வழங்க இணைந்து கொள்ள முடியும். 

ஒரு பயனாளராக இணைந்துகொண்டால் உங்கள் கேள்விகளை கேட்கும் பகுதியில் உங்கள் மருத்துவ கேள்விகளை சமர்ப்பித்து அதற்கான பலதரப்பட்ட பதில்களை பெறலாம் . நீங்கள் கேட்கும் நோய் உடன் தொடர்புடைய ஏனையோரின் கேள்வி பதில்களையும் பெறமுடியும். 

அத்துடன் குறித்த நோய்கள் தொடர்பான மருத்துவ கேள்வி பதில்களை, ஆலோசனைகளை தேடமுடியும். 

கவனிக்க . இந்த செயலி மூலம் பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் நம்பதகுந்தவையாக இருக்கும் என சொல்ல முடியாது . பல பதில்கள் இருப்பதால் நம்பத்தகுந்ததாக இருப்பதை தெரிவு செய்ய முடியும்; அத்துடன் சில பதில்களை பல மருத்துவர்கள் அங்கீகரித்து இருப்பார்கள். 

"ஊரிலேயே போலி டாக்டர் செயலியில இருக்கமாட்டாங்களா என்ன"

பதிவு பயனுடையாதின் பலரை சென்றடைய கீழே உள்ள வோட்டு படைகளில் வாக்களித்து செல்லுங்கள். 

நண்பர்களே ! வாசகர்களே 
இந்த தளம் தொடர்பான உங்களின் கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன். 
அனுப்பவேண்டிய முகவரி . SINNAVANTHAMESH@GMAIL.COM
நன்றி 
Share
Share

12 comments:

துஷ்யந்தன் சொன்னது…

பாஸ் மிக பயன் உள்ள பதிவு(கள்).

எப்புடி பாஸ் இவ்ளோ தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள்..
நீங்கள் ஒரு ஆச்சரியம் தான் பாஸ்
தொடர்ந்து இப்படியே கலக்க என் வாழ்த்துக்கள் பாஸ்

மாய உலகம் சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பா...

Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…

மிகவும் பெறுமதியான தகவல்கள்!

Riyas சொன்னது…

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி,,

M.R சொன்னது…

thamil manam 4

M.R சொன்னது…

நல்ல உபயோகமுள்ள தகவல் நண்பரே

நிரூபன் சொன்னது…

பாஸ்.

வணக்கம் பாஸ், நலமா?

தொலைபேசி மூலம் மருத்துவத் தகவல்களினைப் பெற்றுக் கொள்ள, எம் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கேற்ற அருமையான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

நிரூபன் சொன்னது…

உங்கள் தளம் பற்றி,
இலகுவாக ஒப்பின் ஆகின்றது, பயனுள்ள தொழில் நுடப் தகவல்கள் கிடைக்கின்றது.

எளிமையான & இலகுவான தமிழில் தொழில் நுட்பத் தகவல்களைப் பகிர்ந்து வாறீங்க.

தொடர்ந்தும் பகிருங்கள் நண்பா.

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி நண்பா...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நல்ல தகவல் நண்பா..

ஆயிஷா அபுல் சொன்னது…

பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக