உங்கள் படங்களுக்கு குரல் வடிவம் கொடுக்க ஒரு தளம் 



    உங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள தளம் , மற்றும் ஆப்பிள் செயலியாகவும் உதவுகிறது Fotobabble என்ற தளம்; 

முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முக நூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்க. 


இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணினியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்க 

இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்பமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும் . பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record   என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save   என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்க ; 

இப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும் தரப்பட்டுள்ளது. 



தளமுகவரி  Fotobabble.com 


என்ன பார்கிறீங்க நானும் பாடுவன்ல ;; 
Share
Share

11 comments:

stalin wesley சொன்னது…

நல்லா இருக்கு பாஸ் .......

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல தொழில்நுட்பம்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இன்று என் வலையில்..

“அடக்கம் செய்யவா அறிவியல்“ என்னும் இடுகை வெளியிட்டிருக்கிறேன் அன்பரே..
காண அன்புடன் அழைக்கிறேன்.

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

நிரூபன் சொன்னது…

என்னய்யா புதுசு புதுசா அவிழ்த்து விடுறீங்க..

கலக்கலான பதிவு.

நிரூபன் சொன்னது…

நானும் இந்த மாதிரி ஒரு டெக்னாலஜி எதிர்பார்த்து தேடினேன்.

நீங்கள் பகிர்ந்திருக்கிறீங்க.

ரொம்ப நன்றி பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல தகவல் .பகிர்வுக்கு நன்றி ,வாழ்த்துக்கள் .

K சொன்னது…

ரொம்ப வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு சார்!

sarujan சொன்னது…

நன்றி பாஸ்.

sarujan சொன்னது…

((என்ன பார்கிறீங்க நானும் ....))) lol

சுதா SJ சொன்னது…

தொழில்நுட்ப தகவல்களை அசத்தலாக பதிவிடுகின்றீர்கள்

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Nice n useful find...நன்றி.

கருத்துரையிடுக