பல்வேறு வகையான கோப்புக்களை ஓரிடத்தில் திறக்க FREE OPENER




நாம் கணினியில் பல்வேறுவகையான கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.
உதாரணமாக போட்டோ,ஆடியோ , வீடியோ, PDF . OFFICE கோப்புக்கள் என பல இவற்றை ஓபன் செய்துகொள்வதாயின் அந்தந்த கோப்புக்களை திறக்க பயன்படும் மென் பொருட்களிலே திறக்க முடியும் . 

பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் ஓபன் செய்துகொள்ள துணைபுரிகிறது FREE OPENER மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் 70 க்கு மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும்.


இதன் சிறப்பம்சம் 

JPEG,GIF,bmp, போன்ற போர்மட் உடைய புகைப்படங்கள் திறந்து பார்க்க முடியும்.

avi,flv,mid,mkv,mp3,mp4, mpeg,mpg,mov, wmv, போன்ற மீடிய பைல்களை திறந்து மீடிய பிளேயர் ஆக பயன்படுத்த முடியும் ; 

photoshop, pdf, html, office, java ,DOC,xls,   போன்ற கோப்புக்களையும் இலகுவாக திறந்து கொள்ளலாம். 

இதுபோன்ற 70 க்கு மேற்பட்ட போர்மெட் உடைய கோப்புக்க்களை திறந்து பயன்படுத்த இந்த மென்பொருள் உதவுகின்றது. 

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயற்படவல்ல மிக சிறந்த பயனுள்ள ஓர் மென்பொருளாகும் . அத்துடன் இதன் அளவு 20MB ஆகும் . 
தரவிறக்கம் செய்ய .இங்கே செல்க 
Share
Share

2 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அடடா முதலாவது கமெண்ட் என்னுடையதா?

மிகவும் பிரியோசனமான தகவல் தமேஷ்! ஒரே நேரத்தில் 70 ஃபைல்களா? ம் பாவித்துப் பார்க்கிறேன்!

Mahan.Thamesh சொன்னது…

அண்ணே ஒரேநேரத்தில் இல்ல ஓரிடத்தில் 70 க்கு மேற்பட்ட வகையுடைய கோப்புக்களை திறக்க முடியும்
பயன்படுத்தி பாருங்கள் . நல்லதோர் மென்பொருள்

கருத்துரையிடுக