உங்கள் பதிவுகள் எந்த தளங்களில் காப்பி செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய ஓர் சுப்பர் மென்பொருள் 



பதிவுலகில் இருக்கின்ற பெரும்பாலான பதிவர்கள் நாளாந்தம் குறைப்பட்டு கொள்கின்ற விடயம் தங்களது பதிவுகள் திருடப்படுகின்றன என்பது . சிலர் கஷ்டப்பட்டு தகவலை ஓடி தேடி எடுத்து சிரமப்பட்டு பதிவினை 
போடுவார்கள் அதனை சிலர் லேசாக காப்பி செய்து தங்கள் தளத்தில் பதிவு செய்கிறார்கள் . இதனால் அந்த பதிவினை பல சிரமத்தின் மத்தியில் உருவாக்கிய நபருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் வேறு நபர்களை சென்றடைகின்றது.பதிவுகளை காப்பி செய்பவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்  என்பதை குறிப்பிடுவதுமில்லை. 


இவ்வாறு உங்கள் தளத்தின் பதிவுகளை திருடியவர்களை கண்டறிய உதவுகிறது UN.CO.VER என்ற மென்பொருள் .


 இந்த மென்பொருளின் மூலம் 3 வழிகளில் உங்கள் தளத்தின் பதிவுகள் எங்கு உள்ளன என கண்டறியலாம் 
உங்கள் தளத்தில் பதிவு செய்த எழுத்துக்களை கொண்டு 
பதிவின் முகவரிஇணை கொண்டு 
தள முகவரி மூலம் 
இந்த மென்பொருள் உங்கள் தளத்தின் பதிவுகள் காப்பி செய்யப்பட்ட தள முகவரி, உங்கள் பதிவில் இருந்து எத்தனை சொற்களை திருடப்பட்டுள்ளது 
மற்றும் எத்தனை சதவீதத்தினை உங்கள் தளத்தில் இருந்து திருடினார்கள் ஒவ்வொருவரும் என காண்பிக்கிறது ; கீழே உள்ள படத்தில் உள்ளது போல தேடல் முடிவு வந்து சேரும் . 

கீழே உள்ள தளத்தில் மேலதிக தகவல்களை அறியலாம் 
தரவிறக்க தள முகவரி UN.CO.VER 

பாருங்க ப்ளோக்ல பதிவு போட எங்க இருந்து யோசிக்கிறாரு மனுஷன் . 
Share
Share

2 comments:

நிரூபன் சொன்னது…

பாஸ், இப்படி ஒரு மென்பொருளினை நானும் தேடிக் கொண்டிருந்தேன். பகிர்விற்கும், விளக்கத்துடன் கூடிய பதிவிற்கும் நன்றி சகோ.

சுதா SJ சொன்னது…

நீங்க ரெம்ப பெரிய ஆள் பாஸ்
ரியலி சூப்பர் பதுவு
வாழ்த்துக்கள் பாஸ்

கருத்துரையிடுக