உங்களின் மருத்துவ கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் தரும் ANDROID செயலி 



"நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்"  நோய்கள் நம்மை அணுக முன் காப்பதே சால சிறந்தது . ஆனால் நம்மில் பலர் நோய் ஏற்பட்டு அதன் தாக்கம் பெரிதாக உடலில் ஏற்படும் போதுதான் வைத்தியரை நாடி செல்கிறோம். இதனால் நம் உடல் நோய்க்கு காலம் முழுவதும் அடிமையாகி விடுகிறது.

இப்போதெல்லாம் நம் சட்டைப்பையில் வைத்தியரை கொண்டு சென்று அவரிடம் ஆலோசனைகளை பெறமுடியும். உங்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் நோய்கள் தொடர்பான விளக்கங்கள் ஆலோசனைகளை நீங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பலதரப்பட்ட மருத்துவர்களிடம் இருந்து பெற வழி வகை செய்கின்றது ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயல்படவல்ல HealthTap என்ற மருத்துவ செயலி;   

இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்



இன்றைய தினத்தில் கடந்த காலங்களில் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதரங்களுடன் பட்டியல் படுத்துகிறது NIKON நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திஸ் டே எனப்படும் தளம்.

தளத்தினை சென்றதும் இன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு வருடங்களாக பின்னோக்கி சென்று முக்கிய சம்பவம் இடம் பெற்ற காலத்தில் நிறுத்திகொள்ளும். இப்போது கீழே உள்ள GO என்பதை கிளிக் செய்தால் படங்களுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை தெளிவுபடுத்துகிறது இந்த தளம்.

உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம் 



 உங்கள் கணினியில் உள்ள கேமராவினை  பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் . மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பாயன்படுத்தியிருக்கலாம்.   


 உங்கள் கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு (secruity)  கமரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும். 

உண்மையை சொல்கிறதா கூகுள் தளம் ,? 



சிறந்த தேடல் முடிவுகளை தரும் கூகுள் வலைத்தளத்தில் நாம் எதாவது தேடும் போது எம் தேடலுக்கு உதவியாக கூகுள் தளத்தில் தேடல் பெட்டியிலே அருகில் சொற்கள் அல்லது எழுத்துக்கள் தோன்றுவதை காணலாம்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள் . கீழ் கோடிட்ட சொல் கூகுள் வழங்கியது.

சரி இந்தியாவின் மிக பெரிய அரசியல் தலைவர்கள் பற்றி இவ்வாறு தேடினால் கூகுள் இவர்கள் பற்றி தேட தரும் உதவி சொற்களை பாருங்களேன் .

பாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள் . 



நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல  இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.

பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து  MP3  பாடல்களை தேடவும் . மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது . MUSIC2PC என்ற மென்பொருள் .






இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை அல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும் . 

இதன் வசதிகள் 

1 மிக விரைவான தேடல் வசதி (பாடலின் பெயர் , கலைஞரின் பெயர் ,இசை அல்பம் ) என தேடல் வசதி கொண்டது ; 
2 . தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும் . 
3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
4 . இந்த மென்பொருள் PORTABLE  , DESKTOP  வடிவில் பெற முடியும் . 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 
தரவிறக்க முகவரி music2pc.com

உலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தளம் . 


உலகின் பல்வேறுபட்ட நாடுகளின் அருங்காட்சியகங்களுக்கு சென்று அங்குள்ள கலைப்படைப்புகளை நீங்கள் வீட்டில் இருந்தவாறே ரசிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களையும் பெற முடியும். 

  உலகின் பல பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்கள்,அவை தொடர்பான தகவல்கள் , அவ் அருங்காட்சியகங்களில் உள்ள கலை அம்சங்கள் , சித்திரங்கள் , ஓவியங்கள் என்பவற்றையும் அந்த கலைப்படைப்புகளின் விபரங்களையும் விளக்கமாக தருகிறது . GOOGLEARTPROJECT.COM 

எதிர்கால திட்டங்களை பதிவு செய்ய ஒரு தளம்; 



திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது . நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு . அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது .

உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும் . நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரியநேரத்தில் செய்து கொள்ளவும் வசதி யளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம் ; 

உங்கள் படங்களுக்கு குரல் வடிவம் கொடுக்க ஒரு தளம் 



    உங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள தளம் , மற்றும் ஆப்பிள் செயலியாகவும் உதவுகிறது Fotobabble என்ற தளம்; 

முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முக நூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்க. 

கழிவறையை விட முன்னிலையில் முகநூல்(FACE BOOK) தளம் 


சமூக வலைத்தளங்களில் பட்டி தொட்டி எங்கும் பெயர் போன தளமாகவும் , நாட்டின் உயர் தலைவர் முதல் தொடங்கி அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் முக நூல் தளமானது மனித வாழ்வோடு இன்று ஒன்றித்து போயுள்ளது . அது மட்டுமா இன்றைய உலகின் மனித தேவைகளில் மிக முக்கியமான அத்தியாவசிய தேவையாகவும் விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது .

முக பக்கத்தில் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசதி தற்போது 



முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3 ,Rdio  இசையினை 
உங்கள் முக பக்கத்தில் நேரடியாக  பகிரவும் கேட்கவும் +music வசதியளிக்கிறது ;.

இந்த வசதியினை பெற + music  இந்த லிங்க் சென்று +மியூசிக் இணை 
உங்கள் கூகிள் சாரோம் உலாவியில் நிறுவிகொள்க. 

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க MY TUBE 60 தளம்  


ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE    தளம் விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது; 
இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில் வீடியோக்களை தொகுக்க முடியும்;

முகபக்கத்திற்கான தந்திரோபாயங்கள் (FACE BOOK TRICKS) 

 சமூக வலைத்தளங்களில் மிக பாரிய வலையமைப்பை கொண்ட முகபக்கத்திற்கான சில தந்திரோபாயங்கள்

1. உங்கள் முகநூலில் உள்ள நண்பர்களின் தொலை பேசி இலக்கத்தை கண்டறிய 
உங்கள் நண்பர்கள் முகநூலில் தங்களது தொலைபேசி இலக்கத்தினை பதிவு 
 செய்து வைத்திருப்பின் அவர்கள் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க முடியும். 
இதற்கு உங்கள் முகநூல் பக்கத்தில் ACCOUNT என்பதை கிளிக் செய்து வரும் 
மெனுவில் EDITFRIENDS என்பதை கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் பட்டியல் தெரிய வரும்

 இப்போது CONTACTS என்பதை கிளிக் செய்தால் போதும்

நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களின் பட்டியல் தெரியவரும் . 

2. முகநூலில் உங்களின் செயல்பாடுகளை உங்கள் நண்பர்களிடம் மறைக்க 

நீங்கள் முகநூலில் செய்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் உங்கள் நண்பர்கள் ,நலன்விரும்பிகள் பார்க்க முடியும் ; அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இடுகின்ற கருத்துரைகள் , புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள், நீங்கள் இட்ட விருப்பு ஆகியவற்றை பார்க்கலாம்  . இவற்றை நண்பர்களுக்கு தெரியாமல் மறைக்க 

லைக் செய்ததை மறைக்க
நீங்கள் லைக் செய்ததை காட்டும் தரவுக்கு நேரே புள்ளடி அடையாளத்தினை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL LIKE என்பதை கிளிக் செய்வதன் மூலம்

கருத்துரைகளை மறைக்க 
நீங்கள் இட்ட கருத்துரையை காட்டும் தகவலுக்கு நேரே புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL COMMENT ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள் மறைக்க
புதிதாக இணைத்த நண்பர்களின் தகவலுக்குநேரே  புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL FRIENDING ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

மேலதிக தகவல் 
தற்போது கூகுளின் பிளாக்கர் சேவை ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்; 

பீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அளவினை அதிகரிக்கலாம்,!?


வெற்று பீர் டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும்.

வேற்று பீர் டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ?

பில்கேட்ஸ் எழுதும் வலைத்தளம் படிக்கலாம் வாங்க


உலக பெரும் பணக்காரரும் மைக்ரோ சொப்ட் நிறுவன அதிபருமான பில்கேட்ஸ் வலைப்பதிவு ஒன்றினை எழுதி வருகிறார்.
 நீங்கள் பில்கேட்ஸ் என்ன இந்த சமூகத்துக்காக எழுதிவருகிறார் என தெரிந்துகொள்ள ஆவல் உள்ளவராயின் அவரது THE GATES NOTES  என்ற வலைத்தளத்தை படிக்கலாம்;