ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவினை மேம்படுத்த ஒரு சமூக வலைத்தளம்.


இன்றைய உலகம் சமூக வலைத்தளங்களின் யுகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது . அமெரிக்காவின் ஒபாமா தொடங்கி பக்கத்து வீட்டு 
பாட்டி வரை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் கணக்கு 
வைத்திருக்கும் அளவுக்கு மாற்றியிருக்கிறது இந்த சமூக 
வலைத்தளங்கள். face book , blog , twitter, skype ,tagged என அடுக்கி 
கொண்டே போகலாம் . 
            இந்த பட்டியலில் 2010 கடைசி காலப்பகுதியில் உள்
நுழைந்திருக்கிறது  EDMODO.COM  பார்ப்பதற்கு face book போல 
தோன்றுகிற இந்த தளம்.


வகுப்பறையை விட்டு வெளியே சென்றபின்பும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக்
கொள்ளவும் .  அவர்களுக்கிடையே செய்திகள் ,தகவல்கள் , 
கருத்துக்கள் , ஆலோசனைகள் என்பவற்றை இரு சாரரும் பகிரும்
 வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வகுப்பறைக்கு 
வெளியே ஆன்லைன் இல் இருந்தவாறு ஆசிரியரினால் 
வழங்கப்படும் பயிற்சிகளை கூட இங்கு மாணவர்கள் செய்து 
ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்க முடியும் . மாணவர்கள் குழுவாக 
இணைந்து கொண்டு தகவல்பரிமாற வசதியும் உண்டு . 
இப்போதுதான் உருவாக்கப்பட்டுள்ளமையால் 
குறைந்தளவானோரே தற்போதைய பயனாளர்கள் . பார்ப்போம் 
பொறுத்திருந்து . 

லிங்க் . http://www.edmodo.com/home




Share
Share

3 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இரு சாரரும் பகிரும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. //
மிக பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் நன்றியும்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக

மனோவி சொன்னது…

இப்போதெல்லாம் ஆசிரியர்கள் வெறும் புத்தக எழுத்துக்களை திணிப்பதோடு நிறுத்தி விடுவது ஏன்?

மாணவர்கள் சரி இல்லையா?
இல்லை அவர்களுக்கே விருப்பம் இல்லையா?

கருத்துரையிடுக