அன்புள்ள அம்மாவுக்கு

தாயே நான் உன்னை பிரிந்து 
தொலை துரத்தில் இருப்பதால் தான் 
என் தலையில் எல்லா துக்கங்களும் 
தூங்காது விழித்திருக்கின்றன 

பல கைகள் சேர்த்து செய்த 
மெத்தையில் படுத்திருக்கிறேன் 
உன்மடியில் மட்டும் தான்
 நான் துங்கியிருக்கிறேன்.  




மட மாளிகை வீட்டில் 
நான் வாழ்ந்தாலும் 
நீ வாழும் ஓலை குடிசை தான் 
எனக்கு சொர்க்கம் 

இப்போதெல்லாம் 
உன் தொலை பேசி அழைப்புகள் தான் 
எனக்கு அன்பின் முகவரியை 
தந்துவிட்டு போகின்றன .

தாயே 
உன் மடியில் தலை சாய்த்து
உன் கபடமில்ல முகம் பார்த்து 
உன் விரல் என் தலை கோத
தூங்க வேண்டும் கணப் பொழுதேனும்


என்னை கவர்ந்த அம்மா பாடல் ஒன்று இந்த படலை கேட்கும் 
போது அப்படியே என்னை மறந்து போய்விடுவேன் .
அம்மாவின் அருமை பெருமைகள் பற்றி அழகாக
 எழுதியிருக்கிறார் .பாடலாசிரியர் . 



Share
Share

3 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான படங்களும், ஆழ்ந்த கருத்துக்களும் கொண்ட கவிதைக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

சுதா SJ சொன்னது…

அம்மாக்கு நிகர் யாருமே இல்ல பாஸ்
அம்மா அம்மா தான்,
அம்மா இல்லாத ஊரில் வருத்தம் வேரக்குடாது எண்டு யாரோ சொன்னதுதான்
நினைவுக்கு வருது..

Mahan.Thamesh சொன்னது…

நன்றி கருத்துரைக்கும் வருகைக்கும்
உங்களின் வாழ்த்துக்களுக்கும்

கருத்துரையிடுக