உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை மதிப்பீடு செய்யும் இணையம்


இணைய சேவைகளை பெறும்போதோ அல்லது ஈமெயில் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம் . இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும் . ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும் . எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் அமைதல் வேண்டும்.

 உங்கள் கடவுச்சொற்கள் எண்கள், எழுத்துக்கள் கொண்டு அமைதல் சிறப்பானதாகும். உங்களின் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை அளவீடு செய்யவும், மேலும் சிறப்பான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளவும் PASSWORD METER என்ற தளம் உதவுகிறது .
இந்த தளத்தில் சென்று உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை வீத அடிப்படையில் உங்களுக்கு வழங்கும். அத்துடன் உங்கள் கடவுச்சொல்லில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களுக்கு புள்ளி வழங்கப்படும் அதனைக்கொண்டு உங்கள் கடவுச்சொல்லை சீர் செய்து பாதுகாப்பு மிக்கதாக மாற்றி கொள்ள முடியும் .
தளமுகவரி   HERE
Share
Share

9 comments:

Ramani சொன்னது…

பயனுள்ள தகவல்
எனது கடவுச் சொல்லையும்
சோதித்துப் பார்த்துவிட்டேன் .பாஸ்
நன்றி வாழ்த்துக்கள்

மதுரன் சொன்னது…

அடடா.. பயனுள்ள தகவலாச்சே...
பகிர்வுக்கு நன்றி பாஸ்

koodal bala சொன்னது…

One more Useful sharing

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

ஹி ஹி
நாங்களும் சோதிச்சு பார்த்துட்டோம் இல்ல

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

தேங்க்ஸ் பாஸ்

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல்

ATHAVAN சொன்னது…

 மாப்பிள வாழ்த்துக்கள்..!இந்த காட்டானும் சோதித்து பார்க்க போய் கொம்யூட்டரில் இருக்கும் எல்லாகட்டையையும் தட்டி பார்த்துட்டு உள்ளதும் போச்சுடா நொல்லகண்ணன்னு இருந்தப்ப என்ர வீட்டுக்காரி வந்து எதோ ஒன்றை தட்டினால் எல்லாமே சரியாபோச்சு  எனக்கு அப்புச்சியின் நாபகம்தான் வந்தது அவர் அடிக்கடி சொல்லுவார் காட்டானுக்கு கழுதகூட மேய்க்க தெரியாதெண்டு..!?

ஹேமா சொன்னது…

மிகவும் பிரயோசனமான பதிவு !

நிரூபன் சொன்னது…

வலைப் பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள ஓர் தகவலைத் தந்திருக்கிறீங்க..

இப்பவே என் பாஸ்வேர்ட்டைப் பரிசோதித்துப் பார்க்கப் போறேன். நன்றி சகோ.

கருத்துரையிடுக