போலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்
இப்போதெல்லாம் நாளந்த செய்திகளில் போலி FACE BOOK பாவனையாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் விசமத்தனமான செயற்பாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன . இத்தைகைய விசமத்தனமான மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து எம்மையும் எமது FACE BOOK கணக்கினையும் பாதுகாப்பது அவசியமாகிறது .
சமீபத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வு ஒன்றின் படி போலி கணக்குகளில் 97 % கணக்குகள் பால் நிலை பெண்களாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது .
(ஓர் பெண்ணின் புகைப்படத்தில் பல பெண்களின் பெயரில் போலி கணக்குகள் படம் _ அதிர்வு தளத்தில் இருந்து எடுக்கபட்டது . )
சரியான கணக்கு வைத்திருப்போரின் நண்பர்களின் பட்டியல் எண்ணிக்கை சராசரியாக 130 அண்மித்ததாக அமையும் எனவும் போலி கணக்கு வைத்திருப்போரின் நண்பர்களின் எண்ணிக்கை 726 சராசரியாக இருக்கும் என கூறபட்டுள்ளது . ( இது வெளிநாட்டில் செய்யப்பட்ட ஆய்வு அதுதான் இப்படி இதே நம்ம நாட்டில செய்தால் எப்பிடியும் 1500 க்கு அதிகமாகவே நண்பர்களின் பட்டியல் இருக்கும் . )
போலி கணக்கினை வைத்திருப்போர் தங்களின் சுய விபரத்தினை முழுமையாக வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள் . அதாவது தங்களின் பொழுதுபோக்கு , விருப்பங்கள் போன்றவற்றை பெரும்பாலான போலி கணக்குகள் கொண்டிருக்காது .
கீழே உள்ள விளக்கப்படம் போலி FACE BOOK கணக்கிற்கும் உண்மையான கணக்கிற்கும் உள்ள வேறுபாட்டினை தெளிவுபடுத்துகின்றது.
போலி கணக்கு வைத்திருப்போரின் புகைப்பட அல்பங்களில் ஒன்று அல்லது இரண்டு அவரின் முகப்பு படங்களாக இருக்கும் மேலதிக படங்கள் காட்சிகள் மற்றும் நடிகர்களின் படங்களாக இருக்கும் . உண்மையான கணக்கு உடையவரின் புகைப்பட அல்பத்தில் சொந்த படங்கள் மற்றும் குடும்ப படங்கள் இருக்கும் . அதே போன்று உண்மையான கணக்கு உடையவர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் தங்கள் வாழ்வோடு தொடர்புடைய படங்களையே நண்பர்களுக்கு TAG செய்வார்கள் போலி கணக்கு வைத்திருப்போர் பெரும்பாலும் காட்டூன் மற்றும் காட்சிகளையே TAG செய்வார்கள் .
ஆண்களுக்கு தெரியாத பெண் ஒருவரிடம் இருந்து நண்பராக இணைவதற்கான அழைப்பு வருமாயின் அது போலி கணக்காக இருக்கும் .
இவற்றின் மூலம் போலி கணக்குகளை அறிந்துகொள்ள முடியும்.
நண்பர்களே! இந்த பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .
Tweet | Share |
6 comments:
அடடா..
இப்படியெல்லாம் இருக்கா..
சரிதான்..
தகவலுக்கு நன்றி நண்பரே.
இதுல ஏமாந்து போன பசங்க எத்தனையோ...
தகவலுக்கு நன்றி!
innoru vali irku...
Fb Fake Profilela Image URL ah Copy Pannii.. aTha Google la search Panina Automatic ah therinjidum...
Fake r Real Nu....
சரியான கவனமா இருக்கவேணும்.பயமாத்தான் இருக்கு தமேஷ் !
உண்மையாகவா ? தகவலுக்கு நன்றி!
கருத்துரையிடுக