வலைத்தளங்களுக்கு கூகிள் பிளஸ் share பட்டன் அறிமுகம்


கூகிள் தளம் இன்று அனைத்து வலைத்தள உரிமையாளர்களுக்கும் ஓர் நற்செய்தியை தந்துள்ளது. அதாவது இன்று முதல் உங்கள் தளங்களில் கூகிள் பிளஸ் ஷேர் பட்டனை பயன்படுத்தி கொள்ள முடியும்.இந்த பட்டன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் தங்களின் கூகிள் பிளஸ் கணக்கின் மூலம் உங்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் வசதியளிக்கின்றது. இதன் மூலம் உங்களின் பதிவுகள் பலரை சென்றடைந்து வாசகர்களை அதிகரித்து கொள்ள முடியும்.

கீழே உள்ள படம் பட்டனின் மாதிரி தோற்றம் ஒன்றை காட்டி நிற்கிறது.

share  பட்டனை கிளிக் செய்தால் கூகிள் பிளஸ் தளத்தில் வெளிப்படுத்தப்படும் தோற்றத்தை கீழே உள்ள படம் காட்ட்டுகிறது. இங்கே கீழே உள்ள share என்பதை கிளிக் செய்து வாசகர்கள் அவர்களின் கூகிள் பிளஸ்் பக்கங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த share பட்டனை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க் சென்று உங்களுக்கு பிடித்த தோற்றத்தினை தெரிவுசெய்து அதற்கான கோடிங் பெற்று பயன்படுத்தி கொள்ள முடியும்.


Share
Share

3 comments:

அன்பை தேடி,,,அன்பு சொன்னது…

usefull post thanks

காட்டான் சொன்னது…

தகவலுக்கு நன்றி..!

rizi சொன்னது…

idhu pudhu vasadhi illa ippa oru masama irukku

கருத்துரையிடுக