உங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சமூக வலைத்தளம்


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் ,விருப்பம் அத்துடன் அந்த துறையில் திறமையும் இருக்கும். ஆனால் ஓவியக்கலையை பொறுத்தவரை பெரும்பாலும் அனைவரும் ஓவியங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவராகவே காணப்படுகின்றனர்.

ஓவியக்கலையை ரசிப்பவர்களுக்கும், வரையும் திறமை உள்ளோருக்கும் கை கொடுத்து உதவுகிறது dhonuk.com எனும் இந்திய தளம்.


இந்த தளத்தின் மூலம் உங்களின் ஓவியங்களை வரையும் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த உதவுகிறது. இந்த தளத்தில் இந்தியாவை சேர்ந்த பெருமளவு ஓவிய படைப்பாளிகளின் ஓவியங்களை ரசிக்க முடிவதுடன் பரஸ்பரம் பாராட்டுக்களையும் மற்றும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும் வசதியும் உண்டு.

இந்த தளத்தில் நீங்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்க முடியும்.

தளமுகவரி http://www.dhonuk.com/ 

Share
Share

2 comments:

koodal bala சொன்னது…

நலமா சகோதரர்.....நல்ல பகிர்வு!

...αηαη∂.... சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பா..,

கருத்துரையிடுக