Google வழங்கும் அசத்தல் அதிசய கண்ணாடி _ சுவாரசிய தகவல்கள் .
பலதரப்பட்ட இணைய சேவைகளை வழங்கிவரும் மிகப்பெரும் கூகிள் நிறுவனம் தற்போது புதிய அதிசய கண்ணாடியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடி அல்ல இதன்முலம் ஒரு ஸ்மார்ட் கைத்தொலைபேசியின் வசதிகள் அனைத்தையும் செயற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அதிசய கண்ணாடி தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் காலையில் விழிக்கும் ஒருவருக்கு அவருடைய அன்றைய நாளின் சந்திப்பினை நினைவுட்டுகிறது. அத்துடன் அன்றைய நாளின் வானிலை தகவலை கொடுக்கிறது. நண்பனின் செய்திக்கு குரல் வழி பதில் வழங்குகிறது . அத்துடன் கூகிள் map உதவியுடன் நடக்கிறார். அத்துடன் படங்களை எடுத்து கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிர்கிறார் . நண்பர்களுடன் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகிறார். இந்த வசதிகளை கொண்டதாகவே கண்ணாடி அமையும் என தெரிவிக்கபடுகிறது .
பொதுவாக ஒரு ஸ்மார்ட் கைத்தொலைபேசியின் வசதிகள் அனைத்தையும் இந்த கண்ணாடி கொண்டுள்ளது என தெரிவிக்கபடுகிறது .
இந்த கண்ணாடி ஒரு தகவல் ஒரு விந்தையாகவே உள்ளது வரட்டும் பார்க்கலாம் . அறிவியல் வளர்ச்சி எங்கயோ போய்ட்டு .
கண்ணாடியின் வசதிகளை உள்ளடக்கிய வீடியோ கிளிப்
Tweet | Share |
2 comments:
நல்ல டெக்னாலாஜி...ஆனால் எந்த அளவுக்கு பயன்பாட்டில் வரும் என்பது தெரியவில்லை. தலைவலி, கண் பிரச்னை உள்ளவர்கள் என் சில சிக்கல்கள் உள்ளன. 3D கிளாஸ் மாதிரி கொஞ்சம் மார்க்கெட் கவர் பண்ணமுடியும். தகவலுக்கு நன்றி!
http://senthilgauthaman.blogspot.com/
வணக்கம் நண்பா,
கூகிளின் இந்த அரிய முயற்சியி ஆவலைத் தூண்டுகிறது.
கொஞ்ச காலம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
தகவல் பகிர்விற்கு நன்றி.
கருத்துரையிடுக