கல்விஇணையதளம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்விஇணையதளம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சமூக வலைத்தளம்


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் ,விருப்பம் அத்துடன் அந்த துறையில் திறமையும் இருக்கும். ஆனால் ஓவியக்கலையை பொறுத்தவரை பெரும்பாலும் அனைவரும் ஓவியங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவராகவே காணப்படுகின்றனர்.

ஓவியக்கலையை ரசிப்பவர்களுக்கும், வரையும் திறமை உள்ளோருக்கும் கை கொடுத்து உதவுகிறது dhonuk.com எனும் இந்திய தளம்.


இந்த தளத்தின் மூலம் உங்களின் ஓவியங்களை வரையும் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த உதவுகிறது. இந்த தளத்தில் இந்தியாவை சேர்ந்த பெருமளவு ஓவிய படைப்பாளிகளின் ஓவியங்களை ரசிக்க முடிவதுடன் பரஸ்பரம் பாராட்டுக்களையும் மற்றும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும் வசதியும் உண்டு.

இந்த தளத்தில் நீங்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்க முடியும்.

தளமுகவரி http://www.dhonuk.com/ 

மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம் _ watch know learn .org


கடந்தவாரம் ஆங்கில சொல்லின் அர்த்தத்தை தெளிவுபடுத்தும் வீடியோ தளம் ஒன்றினை பதிவு செய்தேன். இன்றும் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் மற்றும் அறிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விளங்குகிறது. 


ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க


வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது .

உங்கள் மூளையின் திறனை மதிப்பாய்வு செய்ய சிறந்த IQ  TEST தளங்கள் . 


உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் ,நுண்ணறிவு ,பிரச்சனைகளை தீர்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்யவும். இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும். மேலும் மாணவர்களுக்கும். மற்றும் வேலைவாய்ப்புக்கான பரிட்சைக்கு தோற்றுவோருக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது.

கணிதம் கற்க சிறந்த 10 இணைய   தளங்கள் 


 கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 


                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை 
தொகுத்துள்ளேன். 

ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்


இணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும் இணையங்கள் . இவை ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்தரும் என எண்ணுகிறேன்;  


     உங்களின் பணி  திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும் . உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும்(நாட்குறிப்பு ) . இந்த தளம் உதவுகிறது.  இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ உங்களுக்கு நினைவுபடுத்தும் வசதி கொண்டது(ALART). அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாள கூடிய வசதி கொண்டது . 


தளமுகவரி . NYABAG.COM 

    இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும் . 
இந்ததளத்தில் மாணவர்கள் வரவு , மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும் . இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி பேணலாம் . 

தளமுகவரி  ENGRADE .COM

இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்



இன்றைய தினத்தில் கடந்த காலங்களில் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதரங்களுடன் பட்டியல் படுத்துகிறது NIKON நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திஸ் டே எனப்படும் தளம்.

தளத்தினை சென்றதும் இன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு வருடங்களாக பின்னோக்கி சென்று முக்கிய சம்பவம் இடம் பெற்ற காலத்தில் நிறுத்திகொள்ளும். இப்போது கீழே உள்ள GO என்பதை கிளிக் செய்தால் படங்களுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை தெளிவுபடுத்துகிறது இந்த தளம்.

எதிர்கால திட்டங்களை பதிவு செய்ய ஒரு தளம்; 



திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது . நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு . அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது .

உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும் . நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரியநேரத்தில் செய்து கொள்ளவும் வசதி யளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம் ; 

சிறந்த இணைய அகராதிகள்


இன்று இணையத்தில் ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தெளிவுபடுத்த பல அகராதி இணையதளங்கள் உள்ளன . அவற்றில் சிறந்த தொழில் நுட்ப வளர்ச்சி கொண்டு திகழ்கிறது இந்த இணைய அகராதி தளங்கள். 

1  . SHAHI 
      இந்த ஆங்கில அகராதி இணைய தளத்தின் சிறப்பு என்னவெனில் நீங்கள் 
     தேடும்  ஆங்கில சொல்லின் அர்த்தத்தை VERB , NOUN ,ADJECTIVE  என   
     அழகாக பிரித்து தெளிவுபடுத்துகிறது இந்த தளம். அத்துடன் நீங்கள் தேடும்    
    ஆங்கில சொல்லுக்கு பொருத்தமான படங்களை கூகிள், யாஹூ ,பிலிக்கர்     
    போன்ற  தளங்களில் இருந்து தேடி தருகிறது; 

தள முகவரி இங்கே 

கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்



கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TEST எனப்படும் மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் , வகுத்தல் மற்றும் தசமங்கள் ,பின்ன பிரச்சனைகள் ,பணப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள் . 

சிறுவர்களுக்கான வீடியோ தளம்


பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகசிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்த்தல்.ஆகும் குழந்தைகள் கணினியில் வீடியோ கட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகமாகவும்.
 சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ கட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது Kideos.com.








 இந்த தளத்தில் சிறுவர்களின் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப இங்கு வீடியோ
 காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தில் காட்டூன் மற்றும் சிறுவர்கள் குழந்தைகளின் சுவையான வீடியோ காட்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படங்களில் இருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகள் என பல ஏராளமான வீடியோ தொகுப்புக்கள் இங்கு உள்ளன .

ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்



உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன்.

1.FUN EASY ENGLISH
அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.