மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

mp3 toolkit இலவச மென்பொருள்



இசைஆர்வலர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமைகிறது. இந்த mp3 tool kit எனும் மென்பொருள்.இந்த மென்பொருள் மூலம் பல்வேறுபட்ட பணிகளை செய்ய முடியும். அதாவது இந்த மென்பொருளின் துணையுடன் MP3 converter, cd ripper, mp3 cutter, mp3merger, mp3recorder போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். 

இலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST 7 BETA


பல்வேறுபட்ட ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் பாவனையில் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருளாகும். இந்த ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு அவஸ்ட் 7 பீட்டா  தற்போது வெளியாகியுள்ளது. 

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான சிறந்த MUSIC PLAYERS


சிறந்த இசையை தரவல்லதும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்பட வல்ல சிறந்த MUSIC PLAYERS அவற்றின் தரவிறக்க சுட்டிகளுடன் இந்த பதிவில் பகிர்துள்ளேன் . 


அண்ட்ரைய்டு (APPS )  செயலிகளை உங்கள் கணினியில் இயக்கலாம் 


அண்ட்ரைய்டு ரசிகர்கள் தங்களுடைய கணினியில்  அண்ட்ரைய்டு செயலிகளை இயக்க முடியும் . 


இதற்கு BLUESTACKS என்ற WINDOS இயங்கு  தளத்திற்கான மென்பொருள் உதவுகிறது . 117MB அளவுடைய இந்த மென்பொருளை இதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று DOWNLOAD NOW என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து நிறுவிகொள்க. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்ய சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் .

உங்கள் கணினியை பாதுகாக்க Advanced  System  Care 5 புதிய பதிப்பு 


கணினியினை பாதுகாத்து அதனது செயல் திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 மிக அண்மையில் வெளிவந்துள்ளது.

இந்த மென் பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணினியின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது .

பாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள் . 



நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல  இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.

பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து  MP3  பாடல்களை தேடவும் . மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது . MUSIC2PC என்ற மென்பொருள் .






இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை அல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும் . 

இதன் வசதிகள் 

1 மிக விரைவான தேடல் வசதி (பாடலின் பெயர் , கலைஞரின் பெயர் ,இசை அல்பம் ) என தேடல் வசதி கொண்டது ; 
2 . தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும் . 
3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
4 . இந்த மென்பொருள் PORTABLE  , DESKTOP  வடிவில் பெற முடியும் . 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 
தரவிறக்க முகவரி music2pc.com

கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்



கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TEST எனப்படும் மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் , வகுத்தல் மற்றும் தசமங்கள் ,பின்ன பிரச்சனைகள் ,பணப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பல மட்டங்களில் கற்றுகொள்ள வசதியளிக்கிறது இந்த மென்பொருள் . 

உங்கள் உடல் நலத்தை கண்காணிக்க உதவும் மென்பொருள்

எல்லோருமே நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே அனைவரதும் ஆசை என்னுடைய பிரார்த்தனையும் கூட.
நலமுடன் வாழ உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்தம் உங்கள் உடல் நலனை கண்காணித்து பதிவு செய்து உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும்; வைத்திய தேவைகளுக்கு சமர்பிக்கவும் MY DAILY READING என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.




உங்கள் கணினியில் உள்ள நகல் (DUPLICATE ) கோப்புக்களை தேடி அழிக்க மென்பொருள். 



உங்கள் கணினியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால்  கணினியில் உள்ள ஹர்ட் டிஸ்க் இல் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன . இதனால் நாளடைவில் உங்கள் கணினியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணினியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்து கொள்ள AUSLOGICS DUPLICATE FILE FINDER என்ற மென்பொருள் உதவுகிறது . 

பல்வேறு வகையான கோப்புக்களை ஓரிடத்தில் திறக்க FREE OPENER




நாம் கணினியில் பல்வேறுவகையான கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.
உதாரணமாக போட்டோ,ஆடியோ , வீடியோ, PDF . OFFICE கோப்புக்கள் என பல இவற்றை ஓபன் செய்துகொள்வதாயின் அந்தந்த கோப்புக்களை திறக்க பயன்படும் மென் பொருட்களிலே திறக்க முடியும் . 

பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் ஓபன் செய்துகொள்ள துணைபுரிகிறது FREE OPENER மென்பொருள் . 

இந்த மென்பொருள் மூலம் 70 க்கு மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும்.

நாளந்த செயல்பாடுகளை தன்னியல்பாக மேற்கொள்ள உதவும் சிறிய மென்பொருள் REMOUSE 

நாம் பல்வேறுபட்ட பணிகளை ஒவ்வொருவரும் தங்கள் கணினி மூலம் செய்கின்றோம். இருந்தாலும் நாளாந்தம் கணினியினை ஆரம்பித்தல், மூடுதல் மற்றும் ஈமெயில் களை திறந்து பார்த்தல், இனைய உலாவிகளுக்கு செல்லுதல் என பல பணிகளை நாளாந்தம் செய்கின்றோம். 
     இத்தகைய நாளந்த பணிகளை நாம் சுலபமாக செய்ய ஒரு சிறிய அளவுடைய மென்பொருள் உதவுகிறது. அதுதான் RE MOUSE


இந்தியர்களுக்கான இணைய உலாவி-  EPIC BROWSER 

 இந்தியர்களுக்கு பெரிதும் உதவும் இணைய உலாவியாகும்; இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் firefox இணைய 
உலாவியை ஒத்ததாக அமைந்துள்ளது ; அத்துடன் மிக வேகமாகவும் இந்த இணைய உலாவி செயல்படுகின்றது; 

மற்றைய இணைய உலாவிகளுக்கு தரம் குறையாத அம்சங்களை இந்த உலாவி கொண்டுள்ளது ;

புகைப்பட தேடலுக்கான வழிகள் 

புகைப்பட தேடலுக்கு எல்லோருக்கும் தெரிந்த வழிகள் கூகிள் இமேஜ் ,யாஹூ இமேஜ் போன்றன இவற்றை போல சிறந்த புகைப்படங்களை பெற பின்வரும் தளங்கள் உதவுகின்றன . 




1. PIC SEARC



       இந்த தேடுதளத்தில் தேடப்படும் படங்களை விரைவாக காண்பிப்பதுடன்    
       அந்த புகைப்படத்தின் அளவினையும் காட்டுகிறது . அத்துடன் 
       புகைப்படங்கள் எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்த தெரிவுசெய்து 
      தேடும் வசதியுமுண்டு இந்த வசதியினை ADVANCED SEARCH மூலம் 
       பெறலாம் 
        தளமுகவரி PIC SEARCH.COM
      

குழந்தைகளுக்கான இணைய உலாவி (BROWSER )


இணையத்தில் தீய விடயங்களை தவிர்த்து உங்கள் சுட்டி குழந்தைகளுக்கு 
நல்ல பல பயனுள்ள பல தகவல்கள் மற்றும் விளையாட்டுக்களை தருகிறது  குழந்தைகள் கணனியில் கற்கவும் விளையாடவும் ஓர் பாதுகாப்பான இணைய உலாவியாக திகழ்கிறது TWEENS BROWSER . 


குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய உலாவியில் காட்டூன் மற்றும் புகைப்படங்களுடன் ஏராளமான பயனுள்ள இணைய தளங்களை தொகுத்து வைத்துள்ளார்கள். 

இணைய BROWSER களின் பக்கவரலாறுகளை நொடியில் அழிக்க BROWSER CLEANER 

உங்கள் கணினியில் பல்வேறுபட்ட இணைய ப்ரௌசெர் களை பயன்படுத்துவீர்கள் அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு ப்ரௌசெர் களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும் . 
இவற்றை அழிக்க கணினியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம் .